டெத் ஓவர்களில் இவர் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடிவருகிறார். அவரைப்போன்ற வீரர் அணியில் இருப்பது பலம் – தோனி மகிழ்ச்சி

Dhoni

ஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

CSKvsKKR

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களையும், சுப்மான் கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன் குவிக்க கொல்கத்தா அணி 172 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்களையும், அம்பத்தி ராயுடு 38 ரன்களும் குவித்தனர். இறுதிநேரத்தில் ஜடேஜா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 31 ரன்களை அடித்து அசத்தினார். ருதுராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

ruturaj

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது : இந்த போட்டியின் கிளைமாக்ஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். இந்த சீசன் முழுவதும் ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் ஒருவர் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக டெத் ஓவர்களில் ரன்களை குவிக்கிறார். இவருக்கு சப்போர்ட் செய்ய ஒரு வீரர் அணியில் இருந்தால் அது மிகவும் நல்லது.

- Advertisement -

jadeja

இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் அவரது திறமையை காட்டி வருவது மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றியின் மூலம் எங்களால் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. இருப்பினும் இனி வர இருக்கும் தொடர்களில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான பார்வையை எங்களால் இந்த போட்டியில் பெற முடிந்தது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.