இன்றோடு உலக கோப்பையின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைகின்றன. இன்றைய கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இந்தியா இலங்கை அணியுடனும், ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வெற்றிபெற்றாலும் சரி, தோற்றாலும் சரி இந்திய அணி அரையிறுதி போட்டியில் விளையாடுவது உறுதி. ஆனால் இலங்கையை இந்திய அணி வீழ்த்தினால் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பேட்டி ஒன்றை இந்திய அணியின் வீரரான தோனி அளித்துள்ளார். ஏபிபி செய்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : ஓய்வு பெறும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை. நான் ஓய்வு பெறுவதை குறித்து சிந்திப்பதும் இல்லை ஆனால் சிலர் இன்றைய போட்டியோடு ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்கே தெரியாது. மேலும் ஓய்வு குறித்து பேசவும் எனக்கு எண்ணம் தற்போது இல்லை என்று தோனி ஓய்வு குறித்து முதன் முறையாக தனது மவுனத்தை கலைத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



