MS Dhoni : உ.கோ அருகில் வைத்துக்கொண்டு நான் இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை – தோனி ஓபன் டாக்

கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர். கடந்த ஆண்டு முழுவதும் தோனி சரியாக ஆடாததால்

Dhoni
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர். கடந்த ஆண்டு முழுவதும் தோனி சரியாக ஆடாததால் தோனியை அணியில் இருந்து விலகவும், உலகக்கோப்பையில் இடம் கிடைக்காமல் இருக்கவும் அனைவரும் விமர்சித்து வந்தனர்.

Dhoni

ஆனால், 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார் தோனி. அதனை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளிலும் தோனி சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். இந்நிலையில் தோனி தனது முதுகுவலி குறித்து முதன்முறையாக பேசியுள்ளார்.

- Advertisement -

அதன்படி தோனி கூறியதாவது : இந்த ஐ.பி.எல் தொடர் தொடங்கும்முன் வரை நான் நல்ல உடல்தகுதி உடன் இருந்தேன். ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தின் முதல் பாதியிலிருந்து எனது முதுகு பகுதியில் தசை பிடிப்பு காரணமாக கஷ்டப்பட்டு வருகிறேன். இதற்காக தனிப்பட்ட முறையில் பயிற்சியினையும் மேற்கொண்டு வருகிறேன்.

Dhoni

உலகக்கோப்பை தொடர் அருகில் வந்துள்ளது. இந்த வருடம் எனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான வருடம் இந்த உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாகும். இந்த தொடரில் எனது பங்களிப்பை அளிக்க நான் தயாராக உள்ளேன். ஆனால், இப்போது எனது உடல்நிலையில் எந்த ரிஸ்க்கும் நான் எடுக்க விரும்பவில்லை அடுத்த 3 மாதம் நான் திறம்பட செயல்பட வேண்டும் எனவே நான் எனது உடல்நிலை குறித்து மிகுந்த கவனத்துடன் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறேன் என்று தோனி கூறினார்.

Advertisement