என்னை பார்த்து இந்த கேள்வியை யாரும் கேக்ககூடாதுனு தான் கவனமா இருக்கேன் – கெத்தாக பேசிய தோனி

Dhoni

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேசிங் செய்யும் அணியே இந்த மைதானத்தில் வெற்றி பெறும் என்பதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சேசிங்கை தேர்வு செய்தார். ஆனால் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக ரன் குவித்தது மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி போட்டியை வென்றது.

csk vs rr

இதன்மூலம் மும்பை மைதானத்தில் முதலில் பந்துவீசி அசத்தலான வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்திருந்தது. பின்னர் போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது தோனி பேசிய பல விடயங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தன. மேலும் அவர் அளித்த இந்த பேட்டியும் இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது தோனியிடம் கேட்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது உங்களுடைய ஃபிட்னஸ் விடயத்தில் நீங்கள் இன்னும் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி கூறுகையில் :

Dhoni

நான் கிரிக்கெட் விளையாடும் வரை என்னை பார்த்து யாரும் அவர் ஒரு அன் பிட் வீரர்(Unfit) என்று கூறி விடக்கூடாது. ஏனெனில் பர்பாமன்ஸ் பற்றி யாராலும் உறுதியாகக் கூற முடியாது. நான் 24 வயதில் இருக்கும் போதும் என் பர்பாமன்ஸ் பற்றி உறுதிப்படுத்த முடியாது. தற்போது 40 வயதிலும் என்னுடைய பர்பாமன்ஸ் பற்றி உறுதியாக சொல்ல முடியாது. எனவேதான் ஃபிட்னஸ் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். யார் ஒருவரும் என்னை சுட்டிக் காட்டி அவர் அண் பிட் (UnFit) என்று கூறுவதை நான் விரும்பவில்லை. அதன் காரணமாகவே நான் பிட்னஸ் விஷயத்தில் சற்று உழைத்து வருகிறேன்.

- Advertisement -

dhoni 1

மேலும் எங்களது அணியில் உள்ள இளம் வீரர்கள் மிகவும் வேகமாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு சவால் அளிக்கும் வகையில் நான் செயல்பட வேண்டும் என்பதற்காகவே என்பதாலேயே நான் பிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருக்கிறேன் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.