ஸ்கூல்ல உங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் என்ன? பள்ளி குழந்தையின் கேள்விக்கு பதிலளித்த – தல தோனி

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி நடத்திய அனைத்து கோப்பைகளையும் கேப்டனாக அணியை வழிநடத்தி பெற்றுக்கொடுத்த பெருமையைச் சார்ந்தவர். அது மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக தனது மிகச் சிறப்பான ஆட்டத்தினாலும், கேப்டன்சியின் மூலமாகவும் உலகெங்கிலும் பல்வேறு ரசிகர்களைக் கொண்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருடன் தனது கிரிக்கெட் கரியரை முடிக்க இருக்கும் தோனி தற்போது தனது வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் பள்ளி ஒன்றினை துவங்கியுள்ள தோனி அந்த பள்ளி விழாவின்போது குழந்தைகளின் கேள்விக்கு பதில் அளித்து அவர்களை உற்சாகப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அப்படி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது குழந்தைகள் பலர் தோனியிடம் வெவ்வேறு வித்தியாசமான கேள்விகளை வெளிப்படுத்தினர். அதற்கு தோனியும் மிகச் சிறப்பாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் கிரிக்கெட்டில் உங்களுடைய ரோல் மாடல் யார்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தோனி கூறுகையில் : எனது கிரிக்கெட் ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர் தான். அவரைப் பார்த்து அவரைப் போலவே விளையாட வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் பின்னர் தான் எனக்கு தெரிந்தது அவரைப் போல விளையாட முடியாது என்று ஆகையால் அதை கைவிட்டு விட்டேன்.

- Advertisement -

இன்றளவும் அவரைப் போல் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றில் பள்ளி பருவத்தில் உங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் எது? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி :

இதையும் படிங்க : டி20 உ.கோ’யில் அச்சுறுதலான பாபர் – ரிஸ்வான் கூட்டணியை சாய்க்க – இந்தியாவுக்கு முன்னாள் வீரர் சூப்பர் ஆலோசனை

“ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்ட்டில் வருகிறதா”? என பதிலளித்து கலகலப்பை உண்டாக்கினார். அவரது இந்த குறும்பான பதிலுக்கு அரங்கெங்கிலும் சிரிப்பொலி எழுந்தது குறிப்பிடத்தக்கது. தோனி பதில் அளித்த இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement