கொலைக்குற்றவாளி போல நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றோம் – தோனி பகிர்ந்த நெருக்கடியான தருணங்கள்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான காலம் யாதெனில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் தான். ஏனெனில் அப்படி ஒரு துரதிருஷ்டமான காலகட்டத்தை இந்திய அணி சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சேவாக் என பல ஜாம்பவான்கள் இருந்தும் இந்திய அணி அந்த தொடரின் முதல் சுற்றிலேயே பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

Dravid

- Advertisement -

மேலும் அந்த உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர் நாடு திரும்பிய இந்திய அணி மோசமான ஒரு வரவேற்பை சந்தித்தது. 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வீறுநடை போட்டு இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி இந்த தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் இந்திய வீரர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள். மேலும் இந்திய ரசிகர்கள் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் அனைத்து வீரர்களையும் வீட்டிற்கு முன்பும் போராட்டங்களை நடத்தி உருவபொம்மையை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு சொந்த நாட்டிலேயே அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவியது. விமான நிலையத்தில் இந்திய மீடியாக்கள் வீரர்களை துரத்திச் சென்று வர, ஒருபுறம் கேப்டன் டிராவிட் மற்றும் இளம் வீரரான தோனி போன்றோருடைய வீட்டிற்கு முன்பு அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை வெறுத்தார்கள். அதே அளவிற்கு பல கண்டனங்களும் இந்திய அணிக்கு எதிராக எழுந்தன.

Dhoni 1

அப்பொழுதுதான் இந்திய அணியில் மின்னல் வேக மாற்றம் ஒன்று நடைபெற்றது. அதாவது பல வீரர்கள் முன்னணி வீரர்கள் அந்த தொடருடன் தங்களது ஓய்வு முடிவை அறிவிக்க அடுத்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை அடுத்து தலைமை தாங்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அந்த நெருக்கடியான சூழ்நிலையில் சேவாக் தலைமைப் பொறுப்பேற்க தயங்கினார். மேலும் அதே போன்று அனுபவ வீரர்கள் பலரும் முன்வராத நிலையில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தோனியின் கரங்களில் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

- Advertisement -

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையே கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி அந்த தொடருக்கு தலைமை தாங்கினார். அதே நேரத்தில் முன்னணி வீரர்கள் அனைவரும் டி20 தொடரில் இருந்து விலக இளம் அணியை கொண்டு தோனி அந்த தொடரில் களமிறங்கினார். இந்திய அணியை வழிநடத்தும் பெரிய பொறுப்பு அவரிடம் வந்ததும் இந்திய அணி என்ன ஆகப்போகிறது என்ற கேள்வியே அனைவரிடமும் இருந்தது. ஆனால் முதல் போட்டியிலேயே மழை காரணமாக விளையாட முடியாமல் போன இந்திய அணிக்கு அது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் தோனி தலைமையில் இந்திய அணி பவுல்அவுட் முறையில் சிறப்பாக வெற்றி பெற்றது. அதன்பிறகு தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரை வென்று உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இக்கட்டான சூழ் நிலைகளுக்கு இடையே கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி மிகப் பெருமை மிகப் பெரிய ஆளுமைகள் மத்தியில் தனது கேப்டன்ஷிப்பை நிரூபித்தார்.

- Advertisement -

அன்றுமுதல் தோனியின் வெற்றி பயணம் துவங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியாவில் கைப்பற்றிய வரலாற்றை மாற்றி எழுதியது. தோனியின் தலைமையில் வீறுகொண்டு எழுந்த இந்திய அணி அதன் பின்னர் உலக நாடுகள் கண்டு வியக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சியைப் பெற்றது. இந்நிலையில் அந்த சூழலில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியான சம்பவம் குறித்து தோனி அப்போது பேட்டி ஒன்றினை அளித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது :

Dhoni

நாங்கள் 2007ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தோற்று வெளியேறிய போது விமானம் மூலம் டெல்லிக்கு வந்து சேர்ந்தோம். இந்தியா முழுவதும் அது ஒரு கொந்தளிப்பான நேரமாக பார்க்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனத்தில் வந்த நாங்கள் மாலை நேரத்தில் சாலைகளில் செல்லும்போது போலீஸ் வேனில் இடது பக்கத்தில் சேவாக் அருகில் நான் அமர்ந்து இருந்தேன். ஒரு குறுகிய சாலையின் வழியாக வேன் சென்றபோது எங்களை மீடியா வாகனங்கள் சுற்றி வளைக்க முயன்றது. அப்பொழுது நாங்கள் ஒரு குற்றவாளியை போலவும் தீவிரவாதியை போலவும் உணர்ந்த நேரம்.

பின்னர் எங்களை மீடியா வாகனங்கள் பின் தொடர்ந்து வந்ததால் இறுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு நுழைய வேண்டிய வேலை ஆகியது. அதன்படி நாங்கள் அனைவரும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து 20 நிமிடம் வரை அங்கேயே இருந்தோம். பின்னர் எங்களது கார்களில் நாங்கள் தனித்தனியே சென்றோம் என்று தோனி கூறியுள்ளார். மேலும் என்னுடைய மனதில் இது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த ஒரு தருணம் தான் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒரு நல்ல மனிதராக உருவாக்கியது என்று டோனி கூறியுள்ளார். அதன் பின்னர் இந்திய அணிக்கு தேவை என்ன என்பதை உணர்ந்த தோனி சரியாக அணியை கட்டமைத்து பல வெற்றிகளை குவித்து காட்டினார். சிறப்பான ஆளுமையுடன் இந்திய அணியை முன்னுக்கு கொண்டு வந்ததில் தோனியின் பங்கு அதிகம் என்பதே உண்மை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..!

Advertisement