உங்களுக்கு கிடைத்த பெஸ்ட் கிப்ட் எது? தோனி அளித்த சாமர்த்தியமான பதில் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக ஐசிசி நடத்திய அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்று பெயர் எடுத்தவர். 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை, 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் அனைத்து கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்று கொடுத்து மாபெரும் கேப்டனாக ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தவர்.

அதோடு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள தோனி களத்தில் அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி தனது சாமர்த்தியமான கேப்டன்சி மூலமும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்பவர். அதோடு அவரது சமயோகித புத்தியின் மூலம் பவுலர்களுக்கும் அவர் ஆலோசனைகளை வழங்கி எதிரணியை வீழ்த்துவதில் வல்லவர்.

- Advertisement -

இப்படி இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய ஜாம்பவானாக பார்க்கப்படும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்த ஆண்டு தனது கடைசி ஐபிஎல் தொடரை விளையாட இருக்கும் தோனி இம்முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில் அவ்வப்போது அவர் தற்போது சமூக வலைதளத்தில் தோன்றி தனது வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தோனி அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றினில் கலந்து கொண்ட தோனியிடம் மந்த்ரா பேடி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு எது என்று கேட்டார்.

- Advertisement -

அதற்கு தோனி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே இருக்க : மந்த்ரா பேடி உங்கள் மகள் என்று கூறுங்கள் என்று சொன்னார். அதற்கு திருப்பி பதில் அளித்த தோனி : என் மகள் என் கடின உழைப்பின் மூலம் கிடைத்தவள். ஆனால் பரிசு என்பது மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என்று சாமர்த்தியமான பதில் அளித்தார்.

இதையும் படிங்க : IND vs RSA : என்னங்க இது. முதல் ஒருநாள் போட்டியில் இத்தனை ஒப்பனர்களா? – இதை கவனிச்சீங்களா?

என்னதான் தோனி இப்படி பதில் அளித்து இருந்தாலும் இதில் உள்ள இரட்டை அர்த்தத்தை கவனித்த ரசிகர்கள் அவர் பேசும் இந்த வீடியோவை தற்போது இணையத்தில் வைரலாக்கி தோனி இரட்டை அர்த்தத்துடன் இந்த பதிலை அளித்துள்ளார் என்று இந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement