வெற்றி பெற்ற பிறகும் சென்னை அணியில் இந்தனை சரி செய்தே ஆகவேண்டும் – தோனி வருத்தம்

Dhoni
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Iyer

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

வெற்றிக்கு பிறகு பேசிய தோனி கூறியதாவது : முதலில் இன்னிங்க்ஸை விட நாங்கள் பேட்டிங் செய்தபோது மைதானம் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி 150 ரன்களுக்குள் டெல்லி அணி சுழற்றினர். இது அணியின் வெற்றிக்கு அதிக அளவில் உதவியது. எங்கள் அணி சிறந்த பீல்டிங் அணி என்று என்னால் கூற முடியாது.

KKRvCSK_

இதனை விரைவில் சரிசெய்து பீல்டிங்கை மேம்படுத்த வேண்டும். அதே போன்று சென்னை அணியின் மிகப்பெரிய இழப்பு லுங்கி நெகிடி ஆவார். ஏனெனில் அவரே அணியில் அதிவேகமாக பந்துவீசக்கூடிய வீர்ர். மற்றபடி சென்னை அணியில் எந்த குறையும் இல்லை. அனைத்தும் சரியான முறையில் உள்ளது.

Advertisement