பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிலையை சி.எஸ்.கே அணி சந்தித்திருக்கிறது – வருத்தத்தை தெரிவித்த தோனி

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

Garg

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

dhoni 1

இந்நிலையில் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது : என்னால் பல பந்துகளை சரியாக மிடில் பேட்டில் அடிக்க முடியவில்லை. பந்தை பலமாகவே அடிக்க நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் மைதானம் ஸ்லோவாக இருந்ததால் எனக்கு சரியாக பந்து கனெக்ட் ஆகவில்லை. சரியான டைமிங் செய்தாலே போதும் என்று இருந்தது. அந்த அளவிற்கு மைதானம் காணப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் நாங்கள் பேட்டிங் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டோம். இருப்பினும் இந்த போட்டி எங்களிடம் இருந்து சென்றுவிட்டது. பல ஆண்டுகளுக்குக்கு பிறகு இதுபோன்று மூன்று தோல்விகளை நாங்கள் தற்போது சந்தித்துள்ளோம். தோல்விக்கான விடயங்களை ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி வரும் போட்டிகளில் கேட்சிகளையும் விடக்கூடாது நோபால் வீசக் கூடாது என்பதில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும். மேலும் அணி இதுபோன்று கஷ்டத்தில் இருக்கும் நேரத்தில் இந்த தவறை எல்லாம் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

srh

16வது அவருக்கு பிறகு இரண்டு நல்ல ஓவர்கள் வந்தது நல்ல நம்பிக்கையை தருகிறது. யாரும் போட்டியில் கேட்ச்சை விட விரும்பமாட்டார்கள். இருந்தாலும் இது போன்ற தொடர்களில் கேட்ச்யை தவற விடுவது தவறான ஒரு விடயமாகும். இனி வரும் போட்டிகளில் வீரர்கள் தங்களது பெஸ்ட்டை அளிப்பார்கள் என்றும் இந்த தோல்வியில் இருந்து நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்துள்ளன மீண்டும் பலமாக திரும்புவோம் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement