பவுலர்கள் செய்த இந்த தவறே ராஜஸ்தான் அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு காரணம் – தோனி புலம்பல்

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

rr

இந்நிலையில் இந்தப் போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது : 217 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து விளையாடும் பொழுது எங்களுக்கு ஒரு நல்ல ஆரம்பம் தேவை இருந்தது. ஆனால் அது அப்படி நிகழவில்லை ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சாம்சன் ஆகியோர் மிக மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்களின் வெற்றிக்கு அவரது பந்து வீச்சாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தினர்.

Samson

முதல் இன்னிங்சை பார்த்ததால் எங்கெங்கு பந்துவீச வேண்டும் என்ற இடங்களை அவர்கள் நன்றாக தெரிந்து கொண்டு பந்து வீசினார்கள். ஆனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதில் பிழை செய்தனர். நாங்கள் ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுபடுத்தியிருக்க வேண்டும் அப்படி கட்டுப் படுத்தியிருந்தால் முடிவு மாறி இருக்கலாம். ஆனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இந்த தவறே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று தோனி கூறினார்.

Advertisement