அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்க முடியாது. வருத்தத்துடன் பேசிய தல தோனி – காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

CSK_VS_DC

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இரண்டு அணி வீரர்களும் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி விளையாடினார்கள்.

prithvi

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் நிகழ்வின் போது பேசிய தோனி சில விடயங்களை வருத்தமாக பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் : பனி காரணமாக சூழலைப் புரிந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறோம். இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்தது கடந்த போட்டியில் வெற்றி பெறாமல் போக காரணமாக இருந்திருக்கலாம். (ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்தே தோனி வருதத்தை தெரிவித்துள்ளார்.)

ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னர் 14 போட்டிகளில் விளையாட வேண்டும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. சில நோபால்களை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. கடந்த போட்டியில் 200 ரன்கள் வரை சேர்த்து சிறப்பாக தான் ஆடினோம். நான் எந்த இடத்தில் களம் இறங்கினாலும் அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று தோனி கூறினார்.

Advertisement