இவர் அணிக்குள் வந்தால் சி.எஸ்.கே மீண்டும் வெற்றிக்கு திரும்பும் – தோனி பேட்டி

Dhoni-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

CSK_VS_DC

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்தப் போட்டி ஒரு நல்ல போட்டியாக நான் நினைக்கவில்லை.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸ்போது பனி இல்லை என்பதால் மைதானம் ஸ்லோவானது. அணியில் உள்ள பேட்டிங் குறைபாடுகள் வருத்தத்தைத் தருகிறது. ஏனெனில் மெதுவான துவாகத்தால் ரன் ரேட் உயர உயர அழுத்தம் அதிகரிக்கிறது. நாங்கள் இதிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும். ராயுடு அடுத்த போட்டியில் அணிக்கு திரும்பும் போது அனைத்தும் சமநிலைக்கு வரும் என்று நினைக்கிறேன்.

Rayudu 3

இனிவரும் போட்டிகளில் நாங்கள் இன்னொரு பேட்ஸ்மேனை சேர்த்து விளையாட முயற்சிக்க வேண்டும். அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து அணிக்கான பங்களிப்பை அளிக்க வேண்டும். ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் அவர்களுக்கான விக்கெட் இன்னும் கிடைக்கவில்லை. இவை அனைத்தும் களைந்து மீண்டும் வெற்றிக்கு திரும்புவோம் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement