இவர்களின் ஆதரவினால் தான் சி.எஸ்.கே தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது – தோனி

Dhoni
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

rahane

- Advertisement -

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் பிராவோவின் அபாரமான பந்துவீச்சினால் 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியாக ஆடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசிய தோனி : இந்த போட்டியில் துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தபோது அணிக்கு நல்ல பாட்னர்ஷிப் வேண்டும் என்று நினைத்தேன். அதைப்போன்று ரெய்னா மற்றும் பிராவோ என்னுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார்கள். மைதான தன்மை தெரிந்து கடைசி சில ஓவர்களில் ரன் விகிதத்தை அதிகப்படுத்தினோம். மேலும், சென்னை மைதானத்தில் சி.எஸ்.கே ரசிகர்களின் ஆதரவு அதிகம்.

raina

வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தில் சற்று சிரமப்பட்டனர். ஆனால், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு அணி சொந்த மைதானத்தில் ஆடினால் அந்த அணியின் ரசிகர்கள் அந்த அணியை அதிக அளவு உற்சாகப்டுத்துவார்கள். ஆனால், இங்கே சென்னையில் சி.எஸ்.கே அணிக்கு இருக்கும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களின் தொடர் ஆதரவும் அணியின் வெற்றிக்கு உதவுவதாக நினைக்கிறன் என்று கூறினார் தோனி.

Advertisement