சி.எஸ்.கே அணியின் மிடில் ஆர்டர் உருக்குலைந்து வலுவிழக்க இது மட்டுமே காரணம் – வெளிப்படையாக கூறிய தோனி

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan 1

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த தோனி தோல்வி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காமல் சொதப்புவதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி அவர் கூறுகையில் எப்போதெல்லாம் துவக்கத்தில் சரியான ஸ்டார்ட் கிடைக்காமல் போகிறதோ அப்போதெல்லாம் அணியில் உள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.

- Advertisement -

Curran

இதனாலேயே சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். துவக்கம் சரியாக இருந்தால் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் அந்த உத்வேகத்தின் மூலம் சிறப்பான ஆட்டம் வெளிவரும். ஆனால் இந்த தொடரில் தொடக்கம் சரியாக அமையாததால் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் தோல்வி அடைந்ததாக தோனி தெரிவித்துள்ளார்.