இந்த ஒரு விஷயத்துக்காக நான் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் – தோனி உருக்கம்

CSK-fans
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் தொடரை கைப்பற்றி அசத்தியது. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணியானது இனி வேலைக்காகாது என்றும், டேடிஸ் ஆர்மி என்றும் கேலி செய்யப்பட்ட சிஎஸ்கே அணியானது இம்முறை பலமாக திரும்பியது மட்டுமின்றி இறுதியில் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

dhoni 2

- Advertisement -

சென்னை அணியின் ரசிகர்கள் எப்போது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் அணியை தாங்கிப் பிடித்து ஆதரவு அளித்து வருகின்றனர். நேற்றைய இறுதி போட்டியில் கூட கொல்கத்தா அணியை ஒப்பிடுகையில் சென்னை அணிக்கான ரசிகர்களின் ஆரவாரம் மைதானத்தில் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி இறுதியில் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்தும் தனது மனதார கருத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் நிச்சயம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நாங்கள் இப்போது துபாயில் விளையாடி உள்ளோம். இதற்கு முன்னர் ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவிலும் விளையாடி உள்ளோம். உலகின் எந்த மூலையில் சிஎஸ்கே அணி விளையாடினாலும் ரசிகர்கள் நேரில் வந்து மஞ்சள் நிறத் ஜெர்சியுடன் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது அவர்கள் எங்கள் அணியின் மீது வைத்துள்ள அளப்பரிய அன்பினை வெளிக்காட்டுகிறது.

csk fans

சி.எஸ்.கே அணியின் மீது அளப்பரிய அன்பினை வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தற்போது இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று துபாயில் நின்று கொண்டிருந்தாலும் சேப்பாக்கத்தில் இருப்பது போன்ற உணர்வை தான் ரசிகர்கள் எங்களுக்கு வழங்கி இருக்கின்றனர். நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னையில் ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி விளையாடும் என தோனி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த வருடம் உங்களோட பிளான் என்ன ? ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு – சாமர்த்தியமான பதிலளித்த தோனி

ஏற்கனவே சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது கூட தோனி தலைமை தாங்கிய புனே அணியை ஆதரித்து புனே வரை சென்று புனே அணியை ஆதரித்து சென்னை ரசிகர்கள் நேரில் போட்டியை ரசித்த போதும் தோனி இதேபோன்று சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..

Advertisement