சாக்கு போக்கு சொல்ல விரும்பவில்லை. தோல்விக்கு இதுவே காரணம் – தோனி வெளிப்படை

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரை மோசமாக தான் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையே தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏழாவது போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் பிடித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இது அந்த மைதானத்தில் மிகவும் எளிதாக எட்டும் இலக்காகும். அவ்வாறு நினைத்துக் கொண்டு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பலம் சேர்க்கவில்லை.

- Advertisement -

அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்தனர். அதனை தொடர்ந்து 136 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து போட்டிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் தோனி கூறியதாவது :

curran

“இந்த போட்டி எங்களுக்கு நன்றாக அமையவில்லை. பந்தில் ஈரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை ஆடுகளமும் இழகுவாகத்தான் இருந்தது. எங்களது பேட்டிங்கில் பெரிதான உத்வேகம் இல்லை. துவக்கம் முதலே எங்களுக்கு எதுவும் நன்றாக அமையவில்லை.

Rayudu 3

இதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. பேட்டிங் சரியாக ஆடாதது அணியை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியது. அடுத்த போட்டிக்கு அம்பத்தி ராயுடு வந்துவிடுவார். அப்போது எல்லாம் சரியாகிவிடும் அணி சமநிலைப் பெற்று விடும்” என்று தெரிவித்துள்ளார் தோனி.

Advertisement