பல லட்சம் மக்கள் பாக்குறாங்க. மறைக்க ஒண்ணுமில்ல. தோல்விக்கு இதுவே காரணம் – மனமுடைந்து பேசிய தோனி

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்களுக்கு மைதானம் ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். ஆனால் எப்பொழுதும் நாம் நினைத்தபடியே எதுவும் நடந்து விடாது. நாம் அனைத்தையும் பாசிட்டிவான விடயமாகவே பார்க்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் நாம் லட்சக்கணக்கான மக்களின் முன்பு விளையாடுகிறோம். இதனால் மறைக்க எதுவும் இல்லை. சில புது விடயங்களை முயற்சிக்கிறோம் ஆனால் இதுபோன்ற அழுத்தமான சூழ்நிலையில் அது தவறாக முடிந்து விடுகிறது. அனைத்து மாற்றங்களும் டிரெஸ்ஸிங் ரூம்க்கு வெற்றியைக் கொண்டு வந்து விடாது.

jadeja 1

மேலும் எப்பொழுதும் அணியில் ஒரு வீரரை நீக்குவதும் மாற்றுவதும் என்பது யாருக்கும் பிடிக்காது ஏனெனில் 3 முதல் 5 போட்டிகளை வைத்து எதையும் சொல்லிவிட முடியாது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது நன்றாக விளையாடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் இந்த தொடர் நாம் எதிர்பார்த்தபடி செல்லவில்லை என்பது உண்மை என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement