MS Dhoni : நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்த தல தோனி – காரணம் இதுதான்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

dhonibat
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

Dhoni 1

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இந்த போட்டிக்காக இந்திய அணி வீரரான தோனி சற்று அதிக நேரம் பயிற்சி எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவர் பிரசாத் கூறியதாவது : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் பெரிதளவு விமர்சனம் செய்யப்பட்டதால் அவர் தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தவும் மேலும் தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தோனி தனது சிறப்பான ஆட்டத்தை இந்தத் தொடரிலும் வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்.

Dhoni 1

எனவே தோனி இன்றைய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டார். மேலும் அதிக நேரம் ஆகும் பயிற்சிகளை எடுத்துக் கொண்ட தோனி ஸ்பின் பவுலர் எதிரே சற்று தடுமாறுவதால் அவர் ஸ்விப் ஷாட்டுகளுக்கு அதிகமாக கவனம் செலுத்தி இன்று அதனை அதிக நேரம் பயிற்சி செய்தார் என்று பிரசாத் தெரிவித்தார்.

Advertisement