MS Dhoni : அம்பயர் வேண்டாம் நான் இருக்கிறேன் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த தோனி – வீடியோ

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Dhoni
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில் மூன்றாவது அவர் வீசிய தீபக் சாகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அம்பயர் அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.

- Advertisement -

ஆனால் பந்து ஸ்டம்பைத் சரியாக அடிக்கும் என்று உறுதியாக நம்பிய தீபக் சாகர் அதனை தோனியிடம் கூறினார். உடனே தோனி டி ஆர் எஸ் முறைக்கு அப்பீல் செய்தார். ரீப்ளேயில் பந்து ஸ்டம்பைத் அளித்தது தெரியவந்தது எனவே பிருத்திவி ஷா அவுட்டாகி டெல்லி அணியின் சரிவை துவக்கி வைத்தார். தோனியின் இந்த செயல் மீண்டும் டி ஆர் எஸ் முறையில் அவர் எவ்வளவு கில்லாடி என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement