முதல் பந்திலேயே அவுட் கொடுத்த அம்பயர். ரிவியூ கேட்டு பாண்டியாவிற்கு விளக்கம் அளித்த தல – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாட வந்த தோனிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நன்றாக கேப்டன்ஷிப் செய்தார். ஆனால் பேட்டிங் பிடிக்க வந்தவுடன் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்துவிட்டார் நடுவர் அவுட் கொடுத்து விட்டார்.

csk-vs-mi

இதனால் ரசிகர்களுக்கும் தோனிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. பந்துவீச்சாளர் வீசிய அந்த குறிப்பிட்ட பங்கு இடது பக்கமாகச் சென்றது. தோனி கையில் பட்டுச் சென்றது போல் நடுவர் உணர்ந்து இருப்பார் போலிருக்கிறது. உடனடியாக மும்பை வீரர்கள் அப்பீல் செய்தனர். ஒரு நொடி கூட யோசிக்காத நடுவர் உடனடியாக கையை உயர்த்திக் அவுட் கொடுத்து விட்டார்.

- Advertisement -

ஆனால் இதுபற்றி தான் நம் அனைவருக்கும் தெரியுமே, ரிவ்யூ கேட்பதில் கில்லாடி உடனடியாக எதிர் முனையில் நின்று கொண்டிருந்த டுப்லஸ்ஸிஸ் உடன் ஆலோசனை செய்து விட்டு அவரின் முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்டார். அதில் தோனியின் பேட்டில் பந்து படவே இல்லை என்று தெரிந்துவிட்டது.

உடனடியாக களத்தில் நின்று கொண்டிருந்த நடுவர் தனது முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டு தோனிக்கு நாட் அவுட் கொடுத்தார். ஏற்கனவே டிஆர்எஸ் என்னும் விதிமுறையை தோனி சிஸ்டம் என்று தான் கூறி வருகிறார்கள். இப்படி ஒரு வருடத்திற்கு பின்னர் வந்தவுடன் அவ்வளவு ஷார்ப் ஆக சரியாக ரிவ்யூ கேட்ட தோனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஹார்டிக் பாண்டியா என்ன நடந்தது என்று கேட்க தோனியிடம் கேட்க அதற்கு தோனி சிரித்துக்கொண்டே பேட்டை ஆட்டி காண்பித்தார். அதாவது பந்தை அடிக்க முயன்றபோது பேட்டின் ஹாண்டிலில் இருந்து சத்தம் வந்ததாக விளக்கம் கொடுத்து நடந்து சென்றார். இந்த காணொளி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Advertisement