MS Dhoni : தலையில் அடிவாங்கிய தோனி. இதுக்கெல்லாம் கூடவா அவுட் கேப்பிங்க – வீடியோ

நேற்றைய போட்டியில் தோனியின் பேட்டிங் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 43 பந்துகளை சந்தித்த தோனி 58 ரன்களை அடித்தார்.

Dhoni3
- Advertisement -

நேற்றைய போட்டியில் தோனியின் பேட்டிங் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 43 பந்துகளை சந்தித்த தோனி 58 ரன்களை அடித்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளும் அடங்கும். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் வீசிய பந்தில் தோனி தலையில் பட்டு பந்து கீப்பரிடம் சென்றது. அதற்கு அவுட் கேட்டு ராஜஸ்தான் வீரர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

Dhoni 1

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement