சென்னைக்கு பயிற்சி எடுக்க வரும் தோனி. நேரில் பாக்கனுமா ? இந்த தேதில இருந்து தோனியை பார்க்க முடியும் – விவரம் இதோ :IPL 2020

Dhoni
- Advertisement -

இந்த ஆண்டுக்கான (2020 ஆம் ஆண்டு) நடைபெறவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. அதன்படி முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

Dhoni

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து பல மாதங்களாக விலகியிருக்கும் நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரில் பிரகாசிப்பதன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் இந்த தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது ராஞ்சியில் பயிற்சியை மேற்கொண்டு வந்த தோனி அதிகாரபூர்வமாக சென்னைக்கு வந்து பயிற்சி பெறும் தேதியை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில் தோனி மார்ச் 1 ஆம் தேதி முதல் சென்னையில் பயிற்சியினை மேற்கொள்வர் என்றும் இரண்டு வாரம் சென்னையில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்.

Dhoni-Csk

பின்னர் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்த பின்னர் நேரடியாக மும்பைக்கு சென்று முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் பயிற்சி போட்டியின் போது அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement