நீங்க சேன்ஸ் கொடுக்கலன்னா என்ன ? தோனியை யாராலும் தடுக்க முடியாது – ஜூலை 2 ஆம் தேதி என்ன செய்ய போறாரு தெரியுமா ?

Dhoni
- Advertisement -

தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியில் இதுவரை விளையாடவில்லை. துவக்கத்தில் முன்வந்து தற்காலிக ஓய்வு கேட்டாலும் அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த பல தொடர்களாக அவருக்கு கட்டாய வாய்ப்பு மறுப்பும் இந்திய அணியில் இருந்தது.

Dhoni

- Advertisement -

மேலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவரது இடம் சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் துவங்க இருந்த ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற தோனியின் கனவும் கொரோனா வைரஸ் காரணமாக இப்பொழுது வீணாகி உள்ளது.

பிசிசிஐ ஏற்கனவே அவரை வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கி உள்ளதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தோனி எதைப் பற்றியும் நினைக்காமல் தனது பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அவதாரமாக பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

Dhoni

அவர் இந்த லாக்டவுன் அறிவிக்கப்பட்ட இந்த வேளையில் தான் ஏற்கனவே நினைத்து வைத்திருந்த திட்டமான கிரிக்கெட் அகாடமியை ஜூலை இரண்டாம் தேதி துவக்க இருக்கிறார். ராஞ்சியில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் அகாடமியின் முதல் பயிற்சி வகுப்பினை அவர் ஆன்லைன் மூலமாக ஜூலை 2ஆம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முன்னதாக 2017இல் துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவங்கினார். அது ஒப்பந்த பிரச்சனை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளதால் இம்முறை தனது சொந்த ஊரான ராஞ்சியில் இந்த புதிய அகாடெமியை தோனி துவங்கியுள்ளார். இதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு பயிற்சி அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அகாடமியில் பல பயிற்சியாளர்கள் பணிபுரிய உள்ளனர். இதில் இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் தோனி தற்போது கோச்சாக மாறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement