முடிவுக்கு வந்த தல தோனியின் சகாப்தம். சாமர்த்தியமாக முடித்துவைத்த நிர்வாகம் – விவரம் இதோ

dhoni
dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி இரண்டு நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது 15ஆவது ஆண்டிற்குள் நுழைந்தார். தோனி கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடியதற்கு பின்னர் இதுவரை இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் சில தொடர்களில் தோனி தானாக ஓய்வு கேட்டாலும் அதன் பிறகு வந்த பல தொடர்கள் ஆகவே தோனி அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் விரைவில் தோனி ஓய்வு அறிவிப்பார் என்றும் அதற்கான அறிக்கைகள் வெளியாகும் என்றும் பலரும் எதிர்பார்த்த நிலையில் தோனி இதுவரை எந்தவித ஓய்வு குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் தான் மீண்டும் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் தோனி தரப்பிலிருந்து தகவல் வெளியானது.

ஆனால் டி20 போட்டிகளில் தொடர்ந்து இளம் வீரர்களை அணியில் சேர்த்து உலக கோப்பைக்கு கொண்டுசெல்லப் போகிறோம் என்றும் அதற்காக தயார் செய்து வருகிறோம் என்றும் அணி நிர்வாகம் வெளிப்படையாகவே கூறி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்து தனது பதிலை தெரிவித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஜனவரி மாதத்திற்கு பிறகு தோனியின் நிலைமை தெரிய வரும் என்று சூசகமாக தெரிவித்தார்.

dhonistand

இந்நிலையில் தற்போது ஜனவரி மாதம் இந்தியா வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதே போன்று மீண்டும் 50 ஓவர் போட்டிகளில் திரும்புவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை கிட்டத்தட்ட அணி நிர்வாகம் முடித்து வைத்தது என்று கூறலாம்.

- Advertisement -

Ms Dhoni Bhuvneshwar-Kumar

ஏனெனில் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்திய அணியின் அந்த தொடர் ஒரு மிக நீண்ட தொடர் என்பதால் அந்த இரண்டு மாதங்களும் தோனி அணியில் இல்லை என்றால் மீண்டும் தோனி அணிக்குள் வருவது சாத்தியம் அற்றதாகிவிடும். ஏனெனில் உலக கோப்பை நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இத்தனை மாதங்களாக அணியில் இல்லாத ஒருவரை நேரடியாக அணிக்குள் கொண்டு வருவது என்பது அரிதான காரியம். எனவே மீண்டும் தோனி எப்போது திரும்புவாரா ? அல்லது திரும்பாமலே போய்விடுவாரோ ? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

dhoni

ஏனெனில் நியூசிலாந்து தொடர் முடிந்த சில நாட்களில் ஐபிஎல் போட்டிகளும் ஆரம்பித்துவிடும் ஐபிஎல் தொடர் முடிவடைந்தால் டி20 உலக கோப்பை என இந்திய அணியின் அடுத்த அடுத்த பயணம் இருப்பதால் தோனி தற்போது அணிக்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த சில மாதங்களாகவே தோனி கட்டம் கட்டி இந்திய நிராகரித்து வருகிறது. மேலும் அவர்கள் தோனியின் ஓய்வு எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இது குறித்து தோனி வாய் திறந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement