தோனி செய்த காரியம்..! அதிர்ச்சியில் உறைந்து போன மைதான ஊழியர்கள்..! – காரணம் இதுதான்..?

puneground
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி பிலே ஆப் சுற்றிற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. நேற்று புனேவில் நடைபெற்ற பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் போனஸ் வெற்றியை பெற்று தோனி தலைமையிலான சென்னை அணி ரசிகரக்ளுக்கு வெற்றியை பரிசளித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் தோனி ரசிகர்களுக்கு வெற்றி பரிசை அளித்ததுடன், புனே மைதானத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஒரு சிறு பரிசினை வழங்கியுள்ளார். இந்த ஆண்டு சென்னையில் நடக்கவிருந்த சில போட்டிகள் காவேரி பிரச்னை போராட்டத்தால் திடீரெண்டு சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் மட்டும் புனேவிற்கு மாற்றப்பட்டது.

இதனால் வேக வேகமாக புனே மைதானத்தை தயார் செய்தனர். புனே மைதானத்தை 2 , 3 நாட்களில் தயார் செய்த அந்த மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தோனி , தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பரிசாக அளித்துள்ளார்.

இதனை பற்றி தெரிவித்த தோனி “திடீரென்ற சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் புனேவிற்கு மற்றம் செய்யப்பட்டபோது, இங்கிருந்த ஊழியர்ககள் தான் சிறப்பாக செயல்பட்டு மைதானத்தை தயார் செய்த்தனர். அவர்களின் செயலை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது. ” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement