கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டியில் தோனியும் கலந்துகொள்கிறார். வெளியான புதுத்தகவல் – ரசிகர்கள் குஷி

Dhoni-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் முடிவடைந்த பின் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக நடக்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Ground

இந்த போட்டி ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாற்ற பங்களாதேஷ் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் மோடி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் பல கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் தோனியும் கலந்து கொள்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெளியான தகவலில் இந்த போட்டியை வர்ணனை செய்யும் ஒரு சிறப்பு வர்ணனையாளராக இந்த போட்டியில் தோனி கலந்து கொள்ள இருக்கிறார். எனவே கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் தோனி முதன்முறையாக வர்ணனை செய்யும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ind-1

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட தோனி இந்த போட்டியில் சிறப்பு வர்ணனை செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட தோனியின் ரசிகர்கள் இந்த செய்தி குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கங்குலி பல முக்கிய நிகழ்வுகளை அந்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -