வீடியோ : ஆல் ஏரியாலயும் தல. பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி – அனல் பறக்கும் பிராக்டீஸ்

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நாளை செப்டம்பர் 19ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு துபாய் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த முதலாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையான போராடும் என்பதனால் இந்த போட்டியை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான இரண்டு அணிகள் மோதுவதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

CskvsMi

- Advertisement -

ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று மும்பை அணி 4-வது இடத்திலும், 5 வெற்றியை பெற்று சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் சிறிதளவு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனி இம்முறை தனது பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

40 வயதை தொட்ட தோனி இந்த ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தோனி தற்போது வழக்கத்தைவிட பேட்டிங்கில் கூடுதலான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அதிலும் தற்போது சி.எஸ்.கே அணி நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தோனி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் “ஆல் ஏரியாவிலும் தல” என்று பதிவிடப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தோனி மைதானத்தில் அனைத்து பக்கங்களுக்கும் சிக்ஸர்களாக பறக்கவிடுகிறார். போட்டியின் போதும் இதே போன்று அதிரடியாக விளையாடினால் ரசிகர்களுக்கு அது உற்சாகத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement