ரன் அவுட்டிலும் தனது ஸ்கில்லை காண்பித்து பழைய வின்டேஜ் தோனியாக மாறிய தல

Dhoni-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

- Advertisement -

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்யும்போது கடைசியாக பேட்ஸ்மேனாக சக்கரவர்த்தி விளையாடினார். பிராவோ வீசிய அந்த கடைசி ஓவரின் கடைசி பந்தினை அடித்து விட்டு ஒரு ரன் ஓடிய அவர் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு மீண்டும் ஓடினார்.

அப்போது பவுண்டரி லைனில் இருந்த ஜடேஜா பந்தினை எடுத்து வேகமாக எறிய அந்த பந்து தோனியை நோக்கி வேகமாக வந்தது. அந்த பந்தினை அப்படியே பிடித்த வேகத்தில் தனக்கே உரித்தான பாணியில் ஸ்டம்பின் மீது தள்ளி அவரை அவுட் ஆக்கினார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் பழைய தோனி தன்னுடைய அதே ஸ்கில்ஸை பயன்படுத்தி வின்டேஜ் தோனியாக மாறியுள்ளார் என்று இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement