போட்டி முழுவதுமே திட்டிக்கொண்டே இருந்த தல தோனி. இவ்வளவு கோபப்பட காரணம் என்ன தெரியுமா – விவரம் இதோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி அணிகள் நேற்றைய போட்டியில் மோதிக்கொண்டன. கடந்த ஆண்டை போலவே டெல்லி அணி சென்னை அணியை மிக எளிதில் வீழ்த்தியது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் இலக்கை விரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் எடுத்து வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதல் பாதியில் தோனி சந்தோசமாக இருந்தாலும் இரண்டாவது பாதியில் கொஞ்சம் கோபமாகவே காணப்பட்டார்.

Dhoni

நேற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 183 ரன்கள் குவித்தது. இதில் பாதி முடிவில் சென்னை அணி நிச்சயமாக வெற்றி பெற்றுவிடும் என்று எல்லோரும் மகேந்திர சிங் தோனியும் மிக சந்தோஷமாகவே காணப்பட்டார். ஆனால் இரண்டாவது பாதியில் டெல்லி அணி பேட்டிங் செய்த வேளையில் மகேந்திர சிங் தோனி மிக கோபமாகவே காணப்பட்டார்.அவர் கோபத்திற்கு மிக முக்கிய காரணம் சென்னை அணியின் பவுலர்கள். பவர் ப்ளே ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்து கொடுக்கும் தீபக் சஹர் நேற்று மிகவும் மோசமாக பந்து வீசினார்.

அதைப்போலவே பிராவோவும் மிக சிறப்பாக பந்து வீசவில்லை.அவரைத் தொடர்ந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் தாகூரும் நேற்று மிக மோசமாகவே பந்து வீசினார். இதன் காரணமாகவே டெல்லி அணி பவர் ப்ளே ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் குவித்து மிக பெரிய தொடக்கத்தை கொடுத்து டெல்லி அணியின் வெற்றி பாதையை எளிதாகக்கினார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரையும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாமல் போனது. 14-வது ஓவரில் தான் இருவரின் ஜோடியை பிரிக்க முடிந்தது. 72 ரன்களில் ஷா அவுட் ஆனார். சாகும்போது டெல்லி அணியின் ஸ்கோர் 138 ஆக இருந்தது. அதன் பின்னர் சென்னை அணியால் ஆட்டத்தை தன் கைக்குள் கொண்டு வர இயலவில்லை.

- Advertisement -

thakur

இதன் காரணமாகவே நேற்று மகேந்திர சிங் தோனி தீபக் சஹர் முதல் ருத்ராஜ் வரை அனைவரையும் திட்டி கொண்டே இருந்தார். நேற்று மிக மிகக் கோபத்துடன் பார்க்கப்பட்டார். சென்ற ஆண்டு சென்னை அணியின் மிகப்பெரிய அளவில் சொதப்பி தோல்வி அடைந்தது. எனவே இந்த ஆண்டு வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் டோனி ஆடுவதாக தெரிகிறது. அதன் காரணமாகவே நேற்று கோபத்துடன் காணப்பட்டார்.