MS Dhoni : தீபக் சாஹரை முறைத்த தோனி. சாகர் என்ன தவறு செய்தார் தெரியுமா ? – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Dhoni
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 141 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக ரிஷப் பண்ட் 38 ரன்கள் குவித்தார். அவர் 24 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது தாஹிர் ஓவரில் பந்தினை தூக்கி அடித்தார். அந்தப் பந்து பவுண்டரி லைன் அருகில் சென்றது. அப்போது அங்கிருந்த சென்னை வீரர் தீபக் சாகர் எளிதாகப் புடிக்க வேண்டிய அந்த கேட்சை வேடிக்கையாக பிடிப்பதாக பிடித்துக் சிக்ஸ் கொடுத்தார். இதனால் எளிமையான கேட்சை கோட்டை விட்டதாலும் மேலும் சிக்ஸ் கொடுத்ததாலும் சிறிது நேரத்தில் தோனி கோபமடைந்தார் இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பொதுவாக போட்டிகளின்போது கோபப்படாத தோனி இப்போது சமீபகாலமாக தனது கோபத்தை காண்பித்து வருகிறார். இருப்பினும் அவருடைய கோபம் நியாயமாகவே உள்ளது. ஏனெனில், அணிக்கு தேவையான முக்கியமான நேரத்தில் விளையாட்டாக வீரர்கள் செய்யும் காரியத்திற்காக ஒரு கேப்டனாக தோனி கோபப்படுவதில் தப்பில்லை என்பது ரசிகர்களின் கருத்து.

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement