தோனியின் கைகளிலேயே இவர்கள் இருவரது முடிவும் இருக்கிறது – சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 13வது ஐபிஎல் தொடரை ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து அடுத்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏனெனில் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் அதனை தொடர்ந்து ஏப்ரல்,மே மாதங்களில் ஐபிஎல் தொடரும் நடக்குமென்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் குறித்த தகவல்கள் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

csk 1

- Advertisement -

ஒவ்வொரு அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்த சென்னை அணியில் இருந்து கழட்டி விட இருக்கும் வீரர்கள் பட்டியலும் வெளியானது. இதில் முக்கிய இரண்டு வீரர்களாக ஜாதவ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சென்னை சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் முரளிவிஜய், ஹர்பஜன்சிங், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், கரண் ஷர்மா ஆகியோர் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சென்னை ரசிகர்களால் சின்ன தல என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மற்றும் கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் ஆகியவையும் நீக்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Raina-1

மேலும் இவர்கள் இருவர் குறித்த முடிவை தோனி தான் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. அன்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா துபாய்க்கு சென்றும் சொந்த காரணங்களுக்காக உடனடியாக நாடு திரும்பினார். இதனால் அணி நிர்வாகத்திற்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே மனக்கசப்பு அதிகமானது. தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தாலும் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை.

Jadhav

மேலும் அதே போன்று கேதார் ஜாதவ் கடந்த சீசனில் 8 போட்டிகளில் பங்கேற்று வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன எனவே இவர்கள் இருவரும் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றன. ஏலத்திற்கு முன்பாக அது குறித்த முக்கிய முடிவினை தோனியிடம் கேட்கப்படும் என்றும் தோனியின் அபிப்ராயம் மட்டுமே அங்கு செல்லுபடி ஆகும் என்றும் சிஎஸ்கே அணியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement