தோனி பிரதமராகி நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும்..! தமிழ் இயக்குனர் அதிரடி பேச்சு..! – யார் தெரியுமா..?

vigneshsivan
- Advertisement -

ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது சென்னை அணி. வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கோப்பையை கைப்பற்றி சென்னை ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்டுள்ளது. இதற்க்காக தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
sivan

நேற்று மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 வர்கள் முடிவில் 78 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் வில்லையம்சன் 47 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி சதத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

தோனி தலைமையிலான வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு சிறந்த கேப்டனாக செயலபட்டதால், தோனிக்கு பல்வேறு ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது பாரத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனியை நாட்டின் பிரதமராகவே புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுபற்றி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விக்னேஷ் சிவன்.”ஒருவேளை தோனி இந்தியவின் பிரதமரானால் எப்படி இருக்கும்!

என்ன ஒரு அற்புதமான தலைவர் !
என்ன ஒரு சிறந்த மனிதர் !

- Advertisement -

விளையாட்டு வீரர்கள் அனைவரும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இந்த மாணிக்கத்தின் விஷயத்தில் அப்படி நடக்காது !

அவர் இன்னும் மேலும் வளர்ந்து, எதிர் காலத்தில் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல! நாட்டுக்காக தான் ! ” என்று தோனிக்கு புகழாரம் சுடியுள்ளார்.

Advertisement