கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ஒரு முக்கிய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரிடம் கோபம் அடைந்தது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவலை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி பகிர்ந்து கொண்டார்.
தீபக் சாஹரிடம் கோபமடைந்து ஏன்? :
களத்தில் எப்பொழுதுமே அமைதியாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் கேப்டனாக ரசிகர்கள் மத்தியில் “கேப்டன் கூல்” என்று அழைக்கப்படும் தோனி ஒரு சில நேரங்களில் கோபத்தை காண்பித்து விடுவார். அந்த வகையில் தீபக் சாஹர் தொடர்ச்சியாக இரண்டு நோபால் வீசியதும் அவரிடம் தோனி கோபமான பேசியது அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள தோனி கூறுகையில் : அந்த நிகழ்வு நடந்து சில ஆண்டுகள் கடந்து விட்டது. தீபக் சாஹர் சிஎஸ்கே அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்தவில்லை என்ற புகார் எப்பொழுதுமே அவரிடம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் நான் தொடர்ச்சியாக அவரை பவர்பிளே ஓவர்களில் மட்டும் தான் பயன்படுத்தி வந்தேன். அதற்கான காரணத்தையும் அவரிடம் கூறிவிட்டேன்.
பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுக்கும் போது ஏன் இறுதி கட்ட ஓவர்களை வீச ஆசைப்படுகிறாய் என்று கேட்பேன்? அதேபோன்று பவர் பிளேபவர்களில் அவரையும் இறுதி கட்டங்களில் மெதுவாக பந்துவீசும் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வந்தேன்.
பஞ்சாப் அணிக்கு எதிரான அந்த போட்டியில் நான் கோபம் அடைய காரணம் யாதெனில் : கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தீபக் சாஹரின் கைகள் வியர்வையால் நனைந்திருந்ததை நான் கவனித்தேன். அதன் காரணமாக நக்குல் பந்துகளை வீசுமாறு கூறினேன். ஆனால் என்னுடைய பேச்சை கேட்காமல் அவர் தொடர்ச்சியாக இரண்டு நோபால்களை வீசியிருந்தார். என் தாடி நரைத்திருந்தால் எனக்கு வயதாகி விட்டதோ என்று அவர் நினைத்திருக்கலாம்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு அது தெரியாது குறை சொல்லாதீங்க.. விராட் கோலியை பாருங்க.. தோல்விக்கு இதான் காரணம்.. ஏபிடி ஆதரவு
அப்படி அவர் இரண்டு நோபல்களை வீசியதும் நான் நேராக அவரிடம் சென்று உன்னிடம் இருக்கும் எல்லா பந்துகளையும் நான் பார்க்க விரும்பவில்லை. நக்குல் பந்தை மட்டும் வீசு என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அவர் பின்னர் திருத்திக் கொண்டு செயல்பட்டார். அதன் காரணமாகவே அவர் மீது தான் கோபப்பட்டதாக தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.



