ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தற்போது 7 போட்டிகளில் விளையாடி விட்டது கிட்டத்தட்ட இந்த வருடத்தில் பாதி ஐபிஎல் போட்டியில் முடிவடைந்துவிட்டது. எப்போதும் போல் இல்லாமல் இந்த வருட ஐ.பி.எல் தொடர் சற்று வித்தியாசமாக இன்னும் அதிகமான சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வருகிறது.
ஏனெனில் இளம் வீரர்கள் பலர் புதிதுபுதிதாக தங்களது திறமைகளை காட்ட துவங்கியுள்ளனர். பல இளம் வீரர்கள் இந்த வருட ஐபிஎல் தொடரின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தங்கராசு நடராஜன், படிக்கல், ஜெய்ஸ்வால், பிரியம் கார்க், சமத், அபிஷேக் சர்மா, நாகர்கோட்டி, ஷிவம் மாவி போன்றவர்கள் இந்த வருடம் கண்டுபிடிப்பாக அமைந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வருண் சக்கரவர்த்தி எனும் சுழற்பந்துவீச்சாளர் ஆகியோரும் இதில் அடக்கம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டி நடைபெறும் போதெல்லாம் அந்த அணிக்கு எதிராக மோதும் எதிரணியில் உள்ள இளம் வீரர்கள் தோனியிடம் எப்படியாவது பேசி ஆலோசனை பெற்று விட வேண்டும் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
இப்படித்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தோனியை பார்த்ததும் ஏதோ கடவுளைப் பார்த்தது போல் இரு கரம் கூப்பி வணங்கி ஆசி பெற்றார். அந்த புகைப்படம் அப்போது இணையத்தில் வைரலானது.
அதேபோல் போட்டி முடிந்த பின்னர் எதிரணி வீரர்கள் என்றும் பாராமல் எதிரணியில் உள்ள இளம் வீரர்களை அழைத்து தோனி ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வருடம் இதை அதிகமாக மாறிவிட்டது தொடர்ந்து இதை சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது.