அரையிறுதி போட்டி துவங்கியதும் சாதனை படைத்த தல தோனி – விவரம் இதோ

Dhoni-1
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டி தற்போது துவங்கியது.

dhonii

- Advertisement -

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி துவங்கிய சிறிது நேரத்திலேயே தோனி தற்போது ஒரு சாதனையை படைத்துள்ளார். இதோ அந்த சாதனை விவரம்.

அதாவது தோனி இதுவரை 349 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்று அவர் விளையாடுவது 350 போட்டியாகும். மேலும் சர்வதேச அளவில் 10 ஆவது வீரராக தோனி உள்ளார். முதலிடத்தில் சச்சின் 463 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இதில் சிறப்பான ஒரு விடயம் என்னவென்றால் 350 போட்டிகளில் பங்கேற்ற முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார்.

dhoni

இலங்கை சங்கக்காரா அவரை விட அதிகமான போட்டியில் பங்கேற்று இருந்தாலும் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாகவும் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் தோனி விக்கெட் கீப்பிங் விக்கெட் கீப்பராக 350 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement