- Advertisement -
ஐ.பி.எல்

தீபக் சாஹரின் பந்துவீச்சு. தோனியிடம் வாங்கிய திட்டு. சுவாரசிய விவரம் இதோ – அவரின் அற்பதமான பவுலிங்க்கு இதுவே காரணம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனுடைய முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ல்ஸ் அணியுடன் விளையாடியது. முதல் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையான பவுலரான தீபக் சஹர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, 4 ஓவர்கள் வீசிய தீபக் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் போட்டியில் நன்றாக விளையாடாத தீபக் சாகர் இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு முன்பு நெட்டில் தோனிக்கு பந்து வீசி உள்ளார். அப்போது அவர் மீண்டும் சரியான வேகத்தில் மற்றும் லைனில் பந்து வீசவில்லை. பழையபடி பந்தை அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து தோனி தீபக் சாஹரை தனியாக அழைத்து மீண்டும் பழையபடி பந்துவீசும் படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அடுத்த போட்டியில் இதேபோல் மோசமாக பந்து வீசினால் அதற்கு அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

- Advertisement -

தோனியை கூறிய ஆலோசனையை மனதில் வைத்துக் கொண்ட தீபக், நேற்றைய போட்டியில் முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் மூன்றாவது ஓவரில் கிறிஸ் கெயில் மற்றும் நிக்கோலஸ் பூரணை காலி செய்தார். மேலும் அவருடைய 4-வது ஓவரில் தீபக் ஹூடவை விக்கெட் எடுத்து மொத்தமாக நான்கு ஒவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தீபக் சஹரின் அசத்தல் ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணியால் அதன் பின்னர் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் பொறுப்பாக நின்று விளையாடி 47 ரன்கள் குவித்து கொடுத்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயின் அலி மற்றும் டு பிளசிஸ் துணையோடு 15.4வது ஓவரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும் ஆட்டநாயகன் விருதை தீபக் சஹர் பெற்றுக்கொண்டார்.

- Advertisement -
Published by