எல்லாம் முடிஞ்சி போச்சி. இனிவரும் போட்டிகளில் இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் – உறுதியளித்த தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தொடர் குறித்து பேசிய டோனி கூறுகையில் : இந்தத் தொடர் முழுவதுமே நன்றாக அமையவில்லை. இருப்பினும் சில வாய்ப்புகளை நாங்கள் இளம் வீரர்களுக்கு வழங்கினோம். ஆனால் அவளிடம் இருந்து எந்த ஒரு சிறப்பான ஆட்டமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அனுபவ வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளிப்போம் இருப்பினும் எந்த ஒரு போட்டியிலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்கும் போது எந்தவித அழுத்தமும் இன்றி இளம்வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் எங்கள் பேட்டிங் ஆர்டரில் எங்கு வேண்டுமோ அங்கு இறங்கலாம் என்று நாங்கள் வழங்கியிருக்கிறோம் என்று கூறினார். ஆனால் அவர் கூறியபடி ஒரே ஒரு வாய்ப்பு ஜெகதீசனுக்கு மட்டுமே கிடைத்தது. அவரும் சிறப்பாக விளையாடி 33 ரன்கள் அந்த போட்டியில் எடுத்திருந்தார் அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Jagadeesan

தோனி இவ்வாறு கூறியது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இனி வரும் போட்டிகளில் நிச்சயம் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்க வேண்டும் என்று தோனி நினைப்பதாக தெரிகிறது. எனவே இனிவரும் போட்டிகளில் சென்னை அணியில் நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது

Advertisement