இதேமாதிரி பேசினு இருந்தா சி.எஸ்.கே அணியில் விளையாடமாட்ட – நேரலையில் இளம்வீரரை மிரட்டிய தோனி

Chahar4
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது நேரலையில் ஒருவருக்கு ஒருவர் உரையாடிக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் லாக்டவுன் நேரத்தில் தோனி ஜாலியாக பப்ஜி விளையாடி வருகிறார்.

Dhoni-1

- Advertisement -

தனது நண்பர்கள் மற்றும் சக வீரர்களுடன் பப்ஜி விளையாடி வருகிறார். அதில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரும் ஒருவர். சென்னை சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தோனியுடன் பப்ஜி விளையாடும் போது சில விடயங்களை நேரலையில் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்த தீபக் சாகர் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக தேர்வானார். அந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்பட அடுத்து இந்திய அணிக்கும் தகுதி பெற்று தற்போது சில போட்டிகளில் விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தீபக் சாகர் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் போல தற்போது சிஎஸ்கே அணிக்கு திகழ்ந்து வருகிறார்.

chahar

தற்போது சி.எஸ்.கே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் அவர் கடந்த சீசனில் 17 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி சி.எஸ்.கே அணியின் வெற்றிகளுக்கும் உதவினார்.தற்போது இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். இந்நிலையில் தோனி மற்றும் சாஹர் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட உரையாடலில் சில விடயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

- Advertisement -

அதில் தோனியை அவுட்டாக்க சில பந்துகளை அவருக்கு எதிராக வீசுவேன் என்று குறிப்பிட்ட தீபக் சாஹர் யார்க்கர் மற்றும் வைட் பவுன்சர் வீசினால் அவரால் விளையாட முடியாது என்று கிண்டலாக கூறினார். இதற்கு இதற்கு பதிலளித்த தோனி நீங்கள் கூறியது சரிதான் நல்லவேளை எனக்கு ஐபிஎல் ஏலம் வருவதை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.

Chahar

அடுத்த சீசனில் நாங்கள் உங்களை ஏலத்தில் வாங்க மாட்டோம் என்று அவரை கிண்டல் செய்யும் விதமாக அவரை மிரட்டி உள்ளார். தோனி ஒரு பப்ஜி பிரியர் என்பதை ஏற்கனவே அவரது மனைவி சாக்ஷி சென்னை சிஎஸ்கே அணியின் ட்விட்டர் நேரலையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement