பேருந்தில் இருந்து இறங்கி சென்னை அணிக்கு விசில் போடும்படி தமிழில் பேசிய தோனி – வைரல் வீடியோ

Dhoni
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VK and MS

- Advertisement -

இந்த வலைப் பயிற்சியில் அதிரடி ஆட்டக்காரர் வரும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவரும் பயிற்சி எடுத்து வருகிறார். இன்று பயிற்சிக்கு வந்த தோனி வழக்கம் போல பேருந்தில் இறங்கி சென்று பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு அந்த மொத்த நிகழ்வையும் விடியோவாக வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம்.

அந்த விடீயோவின் முடிவில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் அடிங்க என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

வரும் 23ஆம் தேதி நடைபெறஉள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று 11 மணி அளவில் துவங்கி 12 மணிவரை நடந்தது மேலும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது ஒரே கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது மேலும் தள்ளு முள்ளுடன் டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement