அடுத்த சீசன் நீ பவுலிங் போடக்கூடாது.. மகேஷ் தீக்ஷனாவை செல்லமாக கடிந்த தோனி – எதற்கு தெரியுமா?

Theekshana
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 17-ஆவது சீசனானது கோடைகாலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதோடு நடப்பு சாம்பியனாக இந்த சீசனில் களமிறங்கும் சென்னை அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றி தோனியை வெற்றிகரமாக வழியனுப்ப காத்திருக்கிறது. அதேபோன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்திலும் சில இளம் வீரர்களை சென்னை அணி வாங்கி மேலும் அணியை பலப்படுத்தியுள்ளதால் இந்த தொடரானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில சீசன்களாக சென்னை அணியில் இணைந்து விளையாடி வரும் இலங்கை அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு இறுதியில் தோனி தன்னிடம் கூறிய சில விடயங்களை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு புறப்படலாம் என்று கிளம்புவதற்கு முன்னதாக தோனியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என அவரிடம் சென்றிருந்தேன். அப்போது தோனி என்னிடம் அடுத்த சீசனில் உனக்கு பயிற்சியில் பந்துவீச வாய்ப்பு இல்லை என்று கூறினார். மேலும் சில நொடிகள் கழித்து பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வது மட்டும்தான் அடுத்த சீசனில் உனக்கு முக்கிய வேலை என்று என்னிடம் கூறினார்.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் : மகேஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 5 முறை முக்கிய சமயத்தில் கேட்சை தவறவிட்டிருக்கிறார். அதேபோன்று அவருக்கு பேட்டிங்கில் பெரிய அளவு முன்னேற்றம் தேவை என்றும் அப்படி பேட்டிங் பயிற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புகளில் கொஞ்சமாவது ரன்களை சேர்க்க முடியும் என்பதாலேயே அவருக்கு பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளுமாறு தோனி அறிவுரை வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க : சும்மா இருக்கும் அவரை முத்தையா முரளிதரனா மாத்திடாதீங்க.. இந்திய அணியை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

மகேஷ் தீக்ஷனா இலங்கை அணியில் இடம் பெற்று விளையாடி வந்தாலும் பெரிய பிரபலம் இல்லாத இவரை தோனி கொண்டு வந்து அவரை அருமையாக பட்டை தீட்டி உள்ளார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் அவர் சி.எஸ்.கே அணிக்காக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement