அடுத்த ஆண்டு நிச்சயம் இந்த மாற்றம் இருக்கும். அடுத்த 10 வருடங்களை கணக்கில் கொண்டு தோனி எடுத்திருக்கும் – புதிய முடிவு

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

ngidi

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் துவங்கினாலும் மோசமான தொடராக அமைந்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தை பெற்று வெளியேறினர். இந்த தொடர் தோல்விக்கு சென்னை அணியில் உள்ள வயது மூத்த வீரர்களை காரணம் என ஆரம்பத்தில் இருந்து ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில் நேற்றைய கடைசி போட்டிக்கு பிறகு தோனி சென்னை அணியில் செய்யப்பட இருக்கும் முக்கிய மாற்றம் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை அணி சிறப்பாகவே இருந்ததாகவும், இனி மேற்கொண்டு அடுத்து வரும் இளம் தலைமுறைக்காக சென்னை அணியின் வீரர்களின் மாற்றம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையான சிஎஸ்கே அணி இருக்குமாறு ஒரு வலுவான கோர் டீமை தான் உருவாக்க போவதாகவும் தோனி பேசியது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நிச்சயம் அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அணி முழுவதையும் மாற்றும் திட்டத்தில் தோனி எடுக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement