அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணியின் ஏலம் இவர்கள் கையில் தான் உள்ளது – மனம்திறந்த தோனி

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் வெற்றியோடு வெளியேறி இருக்கிறது. முதல் சில போட்டிகளில் தோற்றாலும் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று கௌரவமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த தொடரில் கடைசி இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 7 ஆவது இடத்தினை பிடித்து வெளியேறியது.

- Advertisement -

இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது சீனியர் வீரர்கள் நன்றாக ஆடாதது என பல காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் அடுத்த வருடத்தில் இருந்து தோனி ஆட மாட்டார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் விடையாக தோனி நிச்சயம் ஆடுவேன் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சில முடிவுகளை பொறுத்துதான் அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச்சிறப்பாக கட்டமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த வருட தொடர் எங்களுக்கு மாசமாக அமைந்தது எங்களது முழு திறமையை நாங்கள் காட்டவில்லை.

csk 1

தொடரின் பல பகுதிகளில் நாங்கள் சிறு சிறு தவறுகளை செய்து கொண்டே இருந்தோம். கடைசி நான்கு போட்டிகளில் தான் எங்களது அணியே மிகச் சிறப்பாக விளையாடி இருந்தது. அணியில் ஒரு சில விஷயங்களை மாற்ற முடியாது. அணியில் இருக்கும் அனைவரும் வெற்றிக்காக உழைக்க வேண்டும். இந்த அணியில் இருக்கும் ஒரு சில சீனியர் வீரர்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது.

பிசிசிஐ எங்கு ஏலத்தை நடத்துகிறது ? எவ்வாறு நடக்கிறது ? என்பதைக் கொண்டுதான் அடுத்த வருட அணி அமையும் எங்களது அணியின் அடிப்படையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது எனவும் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..

Advertisement