இதான் நம்ம தல. சப்போர்ட் ஸ்டாப்க்கு சல்யூட் அடித்த தல தோனி

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் முதல் 2 போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இம்முறை தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் இந்த தொடரில் தோனியின் கேப்டன்சி அபாரமாக உள்ளது. பவுலர்களை அவர் பயன்படுத்தும் விதம், பீல்டிங் செட் செய்வது என அனைத்தும் அசத்தலாக உள்ளது. தோனி ஒரு கேப்டன் என்பதைத் தாண்டி அவருடைய நடவடிக்கைகள் எப்பொழுதும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தோனி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் சப்போர்ட் ஸ்டாப்பை நோக்கி சல்யூட் செய்த ஒரு வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவரது செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளாகவே சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அதிலும் குறிப்பாக தோனியின் இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது வீடியோவாக வெளியாகி இணையத்தை கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement