சர்ச்சைக்கு உள்ளான தோனியின் ரன்அவுட். மீண்டும் அம்பயரின் கவனக்குறைவால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா – ஆதாரம் இதோ

Dhoni-2

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Jadeja

நேற்று இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் தனியாக இந்தியா அணியை மெல்ல மெல்ல மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஜடேஜா அவுட் ஆகி வெளியேறிய பிறகு தோனி மட்டும் களத்தில் இருந்தார்.

கடைசி 2 ஓவர்களுக்கு தோனி களத்தில் இருந்தால் வெற்றி என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அதேபோன்று 19 அவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி அதே ஓவரில் ரன் அவுட் ஆனார். ஆனால் தோனி அவுட் ஆனபோது 30 யார்டுகளுக்கு பின்பு 6 பில்டர்கள் நின்றது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அம்யர்கள் கவனிக்காமல் விட்டதால் அவுட் கொடுக்கப்பட்டது.

dhoni 1

இந்த இந்த விக்கெட் முறைப்படி பார்த்தால் விக்கெட்டை கிடையாது. தோனி நாட் அவுட் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடைசி 5 ஓவர்களில் 5 பீல்டர்கள் மட்டுமே வெளியே நிற்க வேண்டும் என்று ஐசிசி விதி இருக்கையில் 6 பேரை நிறுத்தி நியூசிலாந்து அணி அவுட் செய்துள்ளது. இது நியாயமா ? அம்பயர்கள் என்ன குருடர்களா ? என்பது போல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.