MS Dhoni : தோனியை அவுட் என்று தவறாக சொன்ன அம்பயர். அதனாலே தோல்வி ஏற்பட்டது – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Dhoni-1
- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தோனியின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் ஆகும் தோனி 2 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்டிக் பாண்டியா ஓவரில் வாட்சன் அந்த பந்தை தட்டி விட்டு ஓட மலிங்கா அந்த பந்தினை பிடித்து எரிய அந்த பந்து ஓவர் த்ரோ ஆனது. இதனை பயன்படுத்தி இரண்டாவது ரன் ஓட நினைத்த தோனி இரண்டாவது ரன்னை ஓடினார்.

- Advertisement -

அப்போது அந்தப் பந்தை இஷான் கிஷான் பிடித்து சரியாக த்ரோ செய்ய அந்தப் பந்து ஸ்டம்பை அடித்தது. இதை அவுட் என்று மும்பை வீரர்கள் அப்பீல் செய்தனர். மூன்றாவது நடுவர் பலமுறை பார்த்தும் தோனி அவுட் ஆனது உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் பந்து ஸ்டம்பில் அடித்தபோது தோனி பேட்டை உள்ளே வைத்தது போன்று தான் தெரிந்தது இருப்பினும் அம்பயர் அவுட் கொடுத்தார். இதனால் கோபத்துடன் தோனி மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த விக்கெட் நேற்றைய போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Advertisement