தொடர்ந்து சொதப்பினாலும் நான் வாட்சனுக்கு வாய்ப்பளித்த காரணம் இதுதான் – தோனி வெளிப்படை

Watson
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

cskvskxip

அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..

- Advertisement -

17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொஅது டரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

faf

கடந்த 4 போட்டிகளாக வெறும் 52 ரன்களை மட்டுமே அடித்திருந்த துவக்க வீரர் வாட்சன் மீது நேற்று கடுமையான விமர்சனம் இருந்தது. இருப்பினும் அவர் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அதுமட்டுமின்றி நேற்று தனது பழைய பார்மிற்கு திரும்பிய அவர் பந்துவீச்சாளர்களை சிறடித்து ரன்களை சேர்த்தார். இந்நிலையில் தொடர்ந்து சொதப்பினாலும் அவரை ஏன் அணியில் அவரை சேர்த்தேன் என்பது குறித்து தோனி விளக்கியுள்ளார்.

watson

அதன்படி தோனி நேற்றைய வெற்றிக்கு பிறகு வாட்சன் குறித்து குறிப்பிட்டதாவது : பஞ்சாப் அணிக்கு முன்னதான வலைப்பயிற்சியில் வாட்சன் பந்துகளை சிறப்பாக அடித்தார். மேலும் அதுமட்டுமின்றி அவர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தார். மேலும் வாட்சன் களத்தில் நின்று ஆடினால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்தினார் என்று வாட்சன் குறித்து தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement