சாம் கரணை துவக்க வீரராக களமிறக்க இதுவே காரணம் – ரகசியத்தை உடைத்த தல தோனி

Curran

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான தன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

cskvssrh

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் குவித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய சாம் கரன் 31 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை குவித்தார். ஜடேஜா பேட்டிங்கில் 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 3 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்தப் போட்டியில் தோனி எடுத்த சில முடிவுகள் ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமாகவே தோன்றியது. ஏனெனில் துவக்க வீரராக ஜெகதீசன் களமிறங்குவார் என்று கருதப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவரை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்தார் தோனி அதுமட்டுமின்றி சாம் கரனை டூபிளெஸ்ஸிஸ் உடன் தொடக்க வீரராக களம் இறங்கிவிட்டார்.

- Advertisement -

அவர் நினைத்தது போலவே அவரும் சிறப்பாக விளையாடி 21 பந்துகளில் இரண்டு சிக்சர் 3 பவுண்டரி என 31 ரன்களை சேர்த்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். தோனியின் இந்த யோசனைக்கு காரணம் என்ன என்று போட்டி முடிந்து அவர் தனது கருத்தினை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சாம் கரண் மிகச்சிறந்த வீரர். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எப்போதும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

curran

இவரால் இந்த போட்டியில் 15 முதல் 45 ரன்கள் வரை விரைவாக அடிக்க முடியும் என நம்பினேன். அதே போல அவரும் எங்களுக்காக சிறப்பாக பேட்டிங் செய்தார். அதேபோல அவர் பந்து வீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் ஒரு தவிர்க்க முடியாத வீரராக அணியில் இருப்பார் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.