தல தோனியின் முதல் காதலி யார் தெரியுமா..?

msdhoni
- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கிய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்கப்பட்ட படம் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தற்போது தோனி திருமணம் செய்துகொண்டுள்ள சாக்ஷிக்கு முன்னர் தோனி பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து இருப்பது போன்ற காட்சிகள்” தோனி ” படத்தில் படமாக்கபட்டிருக்கும்.

MS

- Advertisement -

அந்த படத்தை பார்த்த ரசிகர்களும் தோனியின் முதல் காதலி பிரியங்கா தான் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னாள் தோனி தனது பள்ளி வயதில் வேறு ஒரு பெண்ணையும் காதலித்து உள்ளார். இந்த தகவலை தோனி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

தற்போது 36 வயதாகும் தோனி, தான் காதலித்த பெண் சாக்க்ஷியை திருமனம் செய்துகொண்டு தனது மகள் ஜிவா வுடன் சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். இருப்பினும் தோனி எங்கு சென்றாலும் உங்களின் முதல் காதலி யார்? யார் ? என்று பலரும் கேட்டு கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு தோனி பதில் எல்லாம் மோனாலிசா ஓவியத்தை போன்ற ஒரு மர்மமான புன்னகை மட்டும் தான். சமீபத்தில் தோனி ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கு பங்கேற்றபோது உங்களது முதல் காதலி யார் என்ற அதே கேள்வி கேட்கப்பட்டது.

dhoni

சிறிது நேரம் வழக்கம் போல மௌனம் சாதித்த தோனி மீண்டும் மீண்டும் அந்த கேள்வியை எதிர்கொண்டதால் பின்னர் எப்படியோ அந்த கேள்விக்கு தனது மௌனத்தை களைத்தார் . நான் முதன் முதலில் காதலித்த பெண்ணின் பெயர் ஸ்வாதி என்றும். 1999 ஆம் ஆண்டு ராஞ்சியில் படித்துக் கொண்டிருந்த போது அந்த பெண்ணை சந்தித்தாக தோனி கூறியுள்ளார். மேலும் தற்போது அந்த பெண் இந்தமேடையில் தான் இருக்கிறார் என்று கூற அனைவருமே திரும்பி திரும்பி பார்த்தனர். பின்னர் தோனி சும்மா விளையாட்டிற்கு கூறினேன் என்று தெரிவித்ததும் அனைவருமே சிரித்துவிட்டனர்.

Advertisement