MS Dhoni : பயிற்சியில் இதுவரை ஈடுபடாத தோனி. தோனிக்கு பதில் இவர் அறிமுகமாக வாய்ப்பு – சி.எஸ்.கே நிர்வாகம்

சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது

Dhoni
- Advertisement -

சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தோனி மற்றும் ஜடேஜா காய்ச்சலால் போட்டியில் ஆடாதது மற்றும் டுப்ளிஸிஸ் போட்டியில் விளையாடாதது என மும்பை அணி எளிதாக சென்னை அணியை வீழ்த்தியது.

Dhoni

- Advertisement -

கடந்த போட்டியில் தோனி மற்றும் ஜடேஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறினார். இந்நிலையில் தற்போது தோனி மற்றும் ஜடேஜாவின் உடல்நிலை பரிசோதனைக்கு பிறகு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தோனி இன்னும் காய்ச்சலில் இருந்து விடுபடவில்லை, முதுகுவலியிலும் இருந்து வலியும் நீங்கவில்லை.

ஜடேஜா காய்ச்சலில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பினார். அதனால் இன்று நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஆனால், தோனி இன்னும் முழுமையாக குணமாகாததால் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தோனிக்கு பதிலாக இன்று தமிழக வீரர் ஜெகதீசன் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jagadeesan

இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேவேளையில் டெல்லி அணியும் 12 போட்டிகளில் 8 வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோனி இல்லாத சென்னை அணி இன்று டெல்லி அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறுமா என்று இன்று இரவு தெரியவரும்.

- Advertisement -

Dhoni

மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி அணி தொடரின் ஆரம்பத்தில் இருந்து அனைவரும் வியக்கும் வகையில் சிறப்பாக ஆடிவருகிறது. தவான், ப்ரித்வி ஷா, ஐயர் மற்றும் பண்ட் என அனைவரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். மேலும், ரபாடா, இஷாந்த், அமித் மிஸ்ரா மற்றும் லாமிசன்னே என பந்துவீச்சாளர்களும் சிறப்பாக வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

dc

இதனால் இந்த போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை வீழ்த்த மும்முரமாக தயாராகி வருகிறது. அதேபோன்று சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் சென்னை அணியும் வெற்றிக்கு மும்முரமாக போராடும் என தெரிகிறது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement