நான் சி.எஸ்.கே அணிக்காக விளையாடியபோது தோனி என்னிடம் கெஞ்சினார். பல ஆண்டு ரகசியத்தை வெளியிட்ட தோனி

hayden1
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆறு வருடங்கள் ஐபிஎல் தொடரில் ஆடியவர் மேத்யூ ஹைடன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் மிகவும் அதிரடியான துவக்க வீரர் ஆவார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனியாளாக வெற்றி பெற்று கொடுத்த பல போட்டிகள் உள்ளது.

Hayden 3

- Advertisement -

அதேநேரத்தில் ஆஜானுபாகுவாக இருக்கும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வித்தியாசமான ஒரு செயலை செய்தார். அதுதான் அவருடைய மங்கூஸ் பேட். கிரிக்கெட் மற்றும் பேஸ்பால் ஆகிய இரண்டு விளையாட்டு பேட்களை ஒன்றிணைத்தார் போல் வித்யாசமாக இருக்கும். அதனை வைத்து 2010 ஆம் ஆண்டு அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ஆடினார்.

ஆனால் பெரிதாக ஏதும் சோபிக்கவில்லை .டெல்லி அணிக்கு எதிராக 43 பந்துகளில் 93 ரன்கள் மட்டுமே மிச்சம். அந்த பேட் சர்வதேச போட்டிகளிலும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அந்த பேட் குறித்து பேசியுள்ளார் ஹைடன். இந்த பேட்டை தோனி அதனை பார்த்து என்ன சொன்னார் என்பதையும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

hayden 1

மேத்யூ ஹைடன் உங்கள் வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன். ஆனால் இந்த பேட்டை மட்டும் நீங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று தோனி என்னிடம் கூறினார். ஆனால் நான் இந்த மட்டையை வைத்து அதனை பயன்படுத்துவதற்காக ஒன்றரை வருடமாக பயிற்சி செய்து வருகிறேன்.

- Advertisement -

இதில் பந்து பட்டால் 20 மீட்டர் அதிகமாக சென்றுவிடும். அணிக்கு பாதிப்பில்லாத வகையில் நான் இதனை வைத்து ஆடுவேன் என்று தோனியிடம் கூறி அதன்பின்னர் அனுமதி பெற்று அந்த தொடர் முழுவதும் மங்கூஸ் பேட்டுடன் விளையாடுனேன் என்று கூறியுள்ளார் மேத்யூ ஹைடன். ஆனால் இந்த பேட்டினை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Hayden 2

ஹைடன் இந்த பேட்டினை வைத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு அடித்த 93 ரன்கள் ஐ.பி. எல் தொடரின் சிறந்த இன்னிங்ஸ் என சுரேஷ் ரெய்னா பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement